scholar

மருவூரில் ஓர் காலை

நேரம் அதிகாலை இரண்டு மணி.

கைத்தொலைபேசியின் அலாரம் அது

சுப்பிரபாதம் இசைக்கின்றது.

 

இசையும் இரைச்சல் போல் கேட்கும்

அந்த அதிகாலைப்பொழுதில்..

 

சுருண்டு படுத்தவன் உடன் எழுந்து

மீண்டும் நன்றே உருண்டு படுக்கின்றான்.

கண்களிரண்டையும் இமைகள் இதமாய் அரவணைக்க

இதுவன்றோ இன்பம்?! என மெளணமாய் முணங்குகின்றான்.

 

பத்து விநாடிகள் கழிந்தன.

ஏதோ ஒன்று அவனுள்ளிருந்து ஒருவித

குற்ற உணர்வினை ஊட்டுகின்றது

ஏதோ ஒன்று அவனை தட்டி எழுப்புகின்றது

ஏதோ ஒன்று உரிமையுடன் எங்கோ அழைக்கின்றது

ஏதோ ஒன்று அவனின் போர்வையுடன் சேர்த்து

மாயத்திரையையும் மெல்ல விலக்குகின்றது

 

அந்த 'ஒன்று' அவனான்மவின் குரல் போலும்!

 

தூக்கத்தை அவன் தூக்கி எறிகின்றான்

தன்னையறியாமல் கட்டிலினின்றெழுந்து..

 

'ஓம்சக்தி' எனச்சொல்லி குளிர்நீரில் உடலலசி

பத்து நிமிடங்களில் செவ்வாடையில் அவன்.

நெற்றியில் குங்குமம்.

மூலமந்திரம் வாயில் முணுமுணுக்க கால்கள் நடைபோடுகின்றன.

எங்கே?

 

சக்தி அவளை நோக்கி.

முக்தி தரும் அவள் பீடத்தை நோக்கி.

பக்தி பெருக்கெடுக்கும் அவள் உறைவிடம் நோக்கி - அங்கே

 

அரவிந்தமதில் அன்னை வீற்றிருக்கக்காண்கின்றான்.

அவனையுமறியாமல் அவனிரு கரங்கள் சிரசின் மேல் வணங்கி நிற்கின்றன.

அன்னைக்கு உளமுருக நன்றி சொல்லி அவன் நிற்கின்றான். (ஏன்?)

 

'வரமாட்டேன் போ'என அவன் சொல்லினும்

'விடமாட்டேன் வா' என அ(ரவ)ணைத்திடும்

ஆதிபரசக்தியின் அன்பை எண்ணி!!!

 

*********

சக்தி_ஷரா

*********

newsletterfooter

Subscribe to our newsletter to recieve the latest news! 

Email address:

Name:


socialmediafooter

For lots more great content, connect with us on our social media pages!

 facebook9a     twitter9     instagram9     youtube9

contactfooter

Weekly poojas every sunday from
10am - 12pm

Phone
+61 451 374 878
+61 433 326 620

Email
omsakthibroadcast@gmail.com

Location

Southern Community Centre
Rupert Drive, Mulgrave, Victoria 3170


moreinfo