scholar

வீணாச்சு

பத்து மாசம் இருந்தாச்சு

பூமி மேல பொறந்தாச்சு

 

பாடி ஆடி திரிஞ்சாச்சு

பாலர் பாடம் படிச்சாச்சு

 

பருவம் வந்து தொலைஞ்சாச்சு - முகத்தில்

பருக்கள் வந்து போயாச்சு

 

படிப்பும் பள்ளியில் முடிச்சாச்சு

பட்டப்படிப்பும் நிறைவாச்சு

 

வேலை தேடி அலைஞ்சாச்சு

வேலைக்காரன் ஆயாச்சு - பொன்னான

 

கால நேரம் வீணாச்சு - எப்போ

காலன் வருவானோ என்று பயமாச்சு

 

அவதார காலம் இதுவென்று - சொன்ன

அன்னையை நம்ப மறுத்தாச்சு - உரு

 

மீன் (எதிர்)பார்த்த கொக்காச்சு

பொன்னான வாய்ப்பும் போயாச்சு

..

..

அதனால...மீண்டும்

 

பத்து மாசம் இருந்தாச்சு

பூமி மேல பொறந்தாச்சு..........

 

*********

சக்தி_ஷரா

*********

newsletterfooter

Subscribe to our newsletter to recieve the latest news! 

Email address:

Name:


socialmediafooter

For lots more great content, connect with us on our social media pages!

 facebook9a     twitter9     instagram9     youtube9

contactfooter

Weekly poojas every sunday from
10am - 12pm

Phone
+61 451 374 878
+61 433 326 620

Email
omsakthibroadcast@gmail.com

Location

Southern Community Centre
Rupert Drive, Mulgrave, Victoria 3170


moreinfo