scholar

பற்று பற்று

கரடுமுரடான பாதைகள் - வழியெங்கும்

பிழை பிழையான பதாதைகள்

 

நித்தம் வழி தடுமாறுகின்ற ஆன்மாக்களோ

பல்லாயிரம் - ஆயினும்

 

பார்க்கும் தூரத்தில் கலங்கரை விளக்காக

விளக்கம் தர ஒரு தாய்

 

வீற்றிருக்கின்றாள் தன் பிள்ளைகளின் வரவுக்காய்

வரம் தருவதற்காய்

 

பாலும் மனமோ பறந்தோடுகின்றது கேட்டால்

"பல்லாயிரம் கேள்விகள் எனக்குள்

 

பதில் தந்தால் பற்றுகிறேன் உன்

பராசக்தியை" என்பார் - முதலில்

 

பற்றிக்கொள் அவளை பற்றுடன் - உன்னுடைய

பல்லாயிரம் கேள்விகளுக்கும் ஓர்

 

பார்வையால் பதிலளிப்பாள் - பழம்

பாவங்களையெல்லாம் பறந்தோடிடச்செய்வாள்!

 

ஓம்சக்தி

 

*********

சக்தி_ஷரா

*********

newsletterfooter

Subscribe to our newsletter to recieve the latest news! 

Email address:

Name:


socialmediafooter

For lots more great content, connect with us on our social media pages!

 facebook9a     twitter9     instagram9     youtube9

contactfooter

Weekly poojas every sunday from
10am - 12pm

Phone
+61 451 374 878
+61 433 326 620

Email
omsakthibroadcast@gmail.com

Location

Southern Community Centre
Rupert Drive, Mulgrave, Victoria 3170


moreinfo